###TNPSC CURRENT AFFAIRS|உலகிலேயே முதல் முறையாக ரிமோட் மூலம் இயங்கும் மைக்ரோஸ்கோப்
2018| அறிவியல் ஓர் பார்வை... - பாகம் - 2!!
அறிவியல் தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும் மனிதர்கள் வியக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. பல புதிய கண்டுபிடிப்புகளால் மக்களின் வாழ்க்கை முறையை எளிமையாக்கி கொண்டிருக்கின்றன, அந்த வரிசையில் கடந்த 2018ல் நடந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி பார்ப்போம்.
மே
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இடங்களின் (Location) துல்லியமான தரவுகளை அளவிடுவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படும் அணு கடிகாரங்களை உருவாக்கியுள்ளது.
'ரூதேனியம்" Ruthenium (Ru) என்று பெயரிடப்பட்டுள்ள 'காந்த தன்மையுடைய நான்காவது (புதிய) தனிமம் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளார்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருட்களிலிருந்து சல்பரை நீக்கும் 4 பாக்டீரிய மரபியற் மாற்றுருக்களை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனிமங்கள் மற்றும் பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சோ;ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜுன்
உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, அபார சாதுர்யத்துடன் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் அதிவேகக் கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய வாஷ் பேசின் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஜூலை
குவாண்டம் விசையியல் பற்றி அறிய உதவும் உலகின் அதிவேக சுழலியினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி இருப்பதை இத்தாலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்சிஸ் (MARSIS) என்ற தொலைநோக்கி மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் பூமியை நோக்கியுள்ள செவ்வாய் கிரகத்தின் தெற்குப் பகுதியில் இந்த ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதல் முறையாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்க கூடிய மைக்ரோஸ்கோப், சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் 70 என்ற நட்சத்திர குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று உருவாவதை ஐரோப்பா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆகஸ்ட்
'scutoid" என்று பெயரிடப்பட்டுள்ள முப்பரிமாண வடிவ (3D Shape) மனித செல்லை, அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பவளப்பாறைகளைக் காக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக வல்லுநர்கள் ரோபோ நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் உயிர் வாழக்கூடிய புதிய 3 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ராஞ்சி அடிப்படையிலான மென்பொருள் மேம்பாட்டாளர் ரஞ்சித் ஸ்ரீவாஸ்தா உலகின் முதல் ஹிந்தி பேசும் மனித ரோபோவை உருவாக்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியை நாளை காண்போம்...
No comments:
Post a Comment