###TNPSC|GENERAL_TAMIL|Book Back Questions - உலகில் இல்லாத பொருளை உவமித்துக் கூறுவது எது?2019-ல் எந்த தேர்வுக்கு- 2019
9ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1. உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி - அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஏற்புடைய பொருளை எழுதுக - வரவு
2. திரைகடலோடியும் திரவியம் தேடு. - அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஏற்புடைய பொருளை எழுதுக. - செல்வம்
3. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கணியன் பு+ங்குன்றனாரின் வாக்கு. - அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஏற்புடைய பொருளை எழுதுக. - உறவினர்
4. பழந்தமிழரின் கடமைகளுள் ஒன்று பொருளீட்டுதல். - அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஏற்புடைய பொருளை எழுதுக. - பொருள் பெருக்குதல்
5. பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு அறிஞர் யார்? - மார்க்கோபோலோ
வுNPளுஊ தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற வைக்கும் பொதுத்தமிழ் பாடப்பகுதியில் முழுமையாக பயிற்சிசெய்ய, நித்ரா பொதுத்தமிழ் வினாவங்கி புத்தகத்தை சலுகை விலையில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் !!

இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
6. சீனத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான பொருள்கள் யாவை? - சீனத்துப் பட்டும் சருக்கரையும்
7. பாண்டிய நாட்டின் வளம் பெருக்கிய துறைமுகம் எது? - கொற்கைத் துறைமுகம்
8. காய்ச்சீர் ................... வகைப்படும். - நான்கு
9. ஆசிரியப்பாவுக்கு உரிய சீர்கள் ........... ஆகும். - மாச்சீர்
10. வெண்பாவில் ′உயர்வு′ என்னும் ஈற்றுச்சீரில் வரும் ஓரசையின் வாய்பாடு ..................... - பிறப்பு
11. உலகில் இல்லாத பொருளை உவமித்துக் கூறுவது ................... - இல்பொருள் உவமையணி
12. கருதிய பொருளை நிலைநாட்ட சிறப்புப் பொருளைப் பொதுப்பொருளாலும், பொதுப்பொருளைச் சிறப்புப்பொருளாலும் கூறி விளக்குவது ..................... - வேற்றுப்பொருள் வைப்பணி
13. ஈரசைச் சீர்களுக்குரிய வாய்பாடுகள் யாவை? - தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
14. காய்ச்சீர் வாய்பாடுகள் யாவை? - தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
15. ′திரை′ - இருபொருள் தருக. - அலை, திரைச்சீலை
16. ′கலிங்கம்′ - இருபொருள் தருக. - ஆடை, ஒருநாடு
17. ′கலை′ - இருபொருள் தருக. - வித்தை, ஆண்மான்
No comments:
Post a Comment