Tuesday, January 8, 2019

###TNPSC CURRENT AFFAIRS-2019| மின்சாரம் இல்லாமல் குளிர்பதனப் பெட்டி| TNPSC - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC CURRENT AFFAIRS-2019|
மின்சாரம் இல்லாமல் குளிர்பதனப் பெட்டி| 

TNPSC - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 மத்திய சுற்றுலா அமைச்சகம், 2018ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டு நடவடிக்கைகள் அடிப்படையில், இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 5.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

🍀 ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்ய, அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலானும், துணைத் தலைவராக பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலர் ராகேஷ் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🍀 உடல் பருமன் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மேற்கு வங்க பள்ளிகளில் பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

🍀 உத்தர பிரதேச மாநிலத்தில், தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்கும்படி, அதிகாரிகளுக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

🍀 இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜேஷ் சுப்ரமணியம், அமெரிக்காவின் மல்டிநேஷனல் கொரியர் விநியோக முன்னணி நிறுவனமான, பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 ஒடிஷா மாநிலத்தில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, 'KILIA" என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. (KALIA - Krushak Assistance for livelihood and Income Augmentation).

🍀 சீன பொறியாளரின் துண்டான கைவிரல்களை, 22 மணி நேரத்துக்குப் பிறகு, மைக்ரோ அறுவைசிகிச்சை மூலம் இணைத்து, கோவை கங்கா மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

🍀 கனடாவில் இயங்கிவரும் ′தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை′ சார்பாக, 2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருது, எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

🍀 2019ஆம் ஆண்டின் சிறந்த வாகன விருதான, ′இந்தியன் மோட்டார் சைக்கிள் ஆஃப் தி இயர்′ (ஐனெயைn ஆழவழசஉலஉடந ழக வாந லுநயச யறயசன), என்ற விருதை, ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650 பெற்றுள்ளது.

🍀 மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவிலுள்ள சோமர்வில்லியைச் சேர்ந்த, ′பெனிக்′ அறிமுகப்படுத்தியுள்ளது.


 
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment