###TNPSC_CURRENT_AFFAIRS-2019|சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
##நடப்பு நிகழ்வுகளின் முக்கிய வினா விடைகள் !!
1. எந்த மாநில அரசு 80 வயதை கடந்த முதியோர்களுக்கு ஓய்வு+திய தொகை வீட்டிற்கே அனுப்பப்படும், என்று அறிவித்துள்ளது? - தமிழ்நாடு
2. ′இரும்பு மனிதர்′ என்றழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு, எந்த மாநிலத்தில் 182மீ உயரமுள்ள உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது? - குஜராத்
3. எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மனித சிறுநீரிலிருந்து உருவான, உலகின் முதல் உயிரி செங்கல்லை உருவாக்கியுள்ளனர்? - தென் ஆப்பிரிக்கா
4. முதன் முறையாக எந்த மாநிலத்தில் திருநங்கை ஒருவருக்கு நர்சிங் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது? - தமிழ்நாடு
5. உலகளவில் 2000இல் இருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நாடுகளில், முதலிடத்தில் உள்ள நாடு? - சோமாலியா
6. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? - துருக்கி
7. கால்நடை பராமரிப்பு சேவைகளை இலவசமாக வழங்குவதற்காக, ′பசு சஞ்சீவனி சேவா′ என்ற நடமாடும் கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்? - ஹரியானா
8. தற்போது, எந்த நிறுவனம் 'குஷி" (முரளாi) என்ற செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது? - பிஎன்பி மெட்லைப்
9. எந்த இணையதளத்தில், முதல் முறையாக, இணைய உரையாடல் பகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? - ஐ.ஆர்.சி.டி.சி
10. 2018ஆம் ஆண்டிற்கான ஐ.நா. மனித உரிமை விருது, தற்போது எவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? - அஸ்மா ஜஹாங்கீர்
11. ஆல்ப்ஸ் மலையில், 2 ஆயிரத்து 300 அடி உயரமுள்ள சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்ட கயிற்றில், நடந்து சென்று சாகசம் செய்தவர்? - அன்டாய்னே கிரேஷினன்
12. நாட்டிலேயே முதல் முறையாக, எங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் போலீசாருக்கு, கழிப்பறை வசதியுடன் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது? - கோவை
13. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் குறித்த உடன்படிக்கை, சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது? - மலாவி
14. ′இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்′ என, ′கூகுள்′ நிறுவனம் எவரை அறிவித்துள்ளது? - யோகி ஆதித்யநாத்
15. எந்த நாடு முதல் முறையாக வெவ்வேறு வகையான 20 நாய்களை, குளோனிங் முறையில் உருவாக்கி, வெற்றி பெற்றுள்ளது? - சீனா
16. உலகக் கோடீஸ்வரர்களின் வளர்ச்சியில், முதலிடத்தில் உள்ள நாடு எது? - சீனா
17. கேரள மாநில கல்வித் துறையில், நவீன தொழில்நுட்ப அம்சங்களை அமல்படுத்தியதற்காக, தற்போது எவருக்கு ஏ.இ.சி.டி., சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது? - அன்வர் சதாத்
18. 2018 மனித மூலதன குறியீட்டு பட்டியலில், முதலிடத்தில் உள்ள நாடு? - சிங்கப்பூர்
19. புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் மம்தா காலியாவிற்கு 27வது வியாஸ் சம்மான் விருது, அவருடைய எந்த நாவலுக்காக வழங்கப்பட்டது? - டுக்ஹம் சுக்ஹாம்
20. அண்டை நாடான வங்கதேசத்தில், ராணுவ மேஜர் ஜெனரல் பதவிக்கு, முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி? - டாக்டர் சுசானே கிடி
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
newsmangas actualité
ReplyDelete