கடலையும் நம்ம ஊர் கருப்பட்டியும் !!
ஆரோக்கியம் நம் கையில்... கடலை கருப்பட்டி பிரியரா நீங்கள்?
கடலையும் நம்ம ஊர் கருப்பட்டியும் !!
👉உண்ணும் உணவின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதன் பயன்களை அறிந்து உண்ணுவது அவசியம்.
👉நியூயார்க்கில் உள்ள எம்போசா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு நடத்தியது, உணவு பழக்கம் பற்றியும் அந்த உணவு தரும் பயன்கள் பற்றிய ஆய்வு அது. அதில் வேர்கடலை அதிகம் நோய் எதிர்ப்புசக்தி கொண்டுள்ளது என்று தெரிந்துள்ளது.
👉'ஏழைகளின் புரதம்" என்றழைக்கப்படும் கடலையானது 30 விதமான ஊட்டச்சத்துக்களை கொண்டது. அவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு வகையான பலன்களை தரக்கூடியது. இதில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை வேகப்படுத்தும் எனவே சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும் நைட்ரிக் அமிலம் இருப்பதால் அது உடலில் உருவாகும் நைட்ரேட் இரத்தக்குழாயை விரிவடைய செய்யும். எனவே இரத்த அழுத்தம் குறையும். நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும்.
👉நல்ல கொழுப்புகளை கொண்ட கடலை வைட்டமின் யு, டீ3, போலிக் ஆசிட் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது இது கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தவை. இதில் உள்ள நியாசின் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கும். மேலும், நரம்பு மண்டல நோய்க்கு சிறந்த நிவாரணியாக பயன்தருகிறது. கால்சியம், வைட்டமின் னு உள்ளதால் எலும்பு, பல் வளர்ச்சிக்கு நல்லது.

👆👆👆
👉அதேபோல் 'பெண்களின் தோழி" என்றழைக்கப்படும் கருப்பட்டியும் அதிக மருத்துவ பயன்களை கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு பருவகாலம் முதல் மகப்பேறு, மாதவிடாய் காலங்களில் பக்கபலமாக இருப்பது கருப்பட்டி.
👉இதில் நாம் மேற்சொன்ன கடலையில் பித்தம் அதிகம். எனவேதான், பாரம்பரியமாக நம் முன்னோர்கள் கடலை சாப்பிடும்பொழுது கூட வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்வார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் சத்தான கடலையை வறுத்து கூடவே கருப்பட்டி சேர்த்து இரண்டையும் நல்ல பதத்தில் அரைத்து செய்யும் பண்டம் 'கடலை கருப்பட்டி உதிரி". அதீத சுவையும், மிகச் சிறந்த ஆரோக்கியத்தையும் தரும் நமது கடலை கருப்பட்டி உதிரியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
கடலை கருப்பட்டி உதிரியை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
👉நமது பாரம்பரிய பண்டங்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்து அதற்கென ஒரு களத்தை அமைக்க பணியாற்றும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் இந்த கடலை கருப்பட்டி உதிரி இப்பொழுது கிடைக்கிறது. ஆர்டர் செய்த ஓரிரு நாட்களில் இலவச ஹோம் டெலிவரி செய்கிறார்கள், கூடவே கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உண்டு. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து பயன்பெறலாம்.
'பயனறிந்து உண்ணுவோம், பயனடைவோம்"
No comments:
Post a Comment