Friday, December 28, 2018

###TPSC CURRENT AFFAIRS-2018 மீளா துயரங்கள். || ###நினைவு தினங்கள் ஒரு பார்வை - பாகம் 02 இனி இவர்கள் நம் நினைவுகளில் மட்டுமே...

###TPSC CURRENT AFFAIRS-2018
 மீளா துயரங்கள்...!!
நினைவு தினங்கள் ஒரு பார்வை - பாகம் 02

இனி இவர்கள் நம் நினைவுகளில் மட்டுமே...


2018ஆம் ஆண்டு முடியும் நிலையில், இந்த உலகத்திற்காக பல சாதனைகளை நிகழ்த்தி, நம்மை விட்டு பிரிந்து சென்ற, பிரபலங்களின் நினைவு தினங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...! 

சியோ மியாகோ

ஜப்பானை சேர்ந்தவரும், உலகின் மிக வயதான நபரான சியோ மியாகோ தமது 117-வது வயதில் உயிரிழந்தார். உலகிலேயே அதிக வயதுள்ள நபர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். 

கே.ராணி

இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி ஜூலை 13, 2018-ல், ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், பெங்காலி ஆகிய மொழித் திரைப்படங்களில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். 

பிரபஞ்சன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், டிசம்பர் 21, 2018-ல் புதுச்சேரியில் காலமானார். 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கொடுத்துள்ள இவர், வானம் வசப்படும் என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். 

ஆலன் பீன்

நிலவில் 4-வது விண்வெளி வீரராக கால் பதித்த ஆலன் பீன் மே 26, 2018-ல் அமெரிக்காவில் காலமானார். அவர் நாசாவின் விண் ஆய்வு நிலையமான ஸ்கைலாப் பயணத்திலும் இடம் பெற்றுள்ளார். 

அ.சிவலிங்கம்

தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்த, புலவர் அ.சிவலிங்கம் டிசம்பர் 16, 2018-ல் திருச்சியில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, கறம்பக்குடி அஞ்சலகத்தில் பணியாற்றியபோது 1955-ல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார். ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் 
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் டிசம்பர் 01, 2018-ல் காலமானார். இவர் அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்துள்ளார். 

மதன்லால் குரானா

பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா அக்டோபர் 27, 2018-ல் டெல்லியில் காலமானார். டெல்லியில் கடந்த 1993 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த குரானா, பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்ற தலைவர்களில் ஒருவர். 

பீஷ்மநாராயண சிங்

தமிழக ஆளுனராக கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பீஷ்மநாராயண சிங் ஆகஸ்ட் 1, 2018-ல் காலமானார். இவர் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை அசாம் ஆளுநராகவும் பதவி வகித்தார். 

நெர்சஸ் கிரிக் கிகோரியன்

உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்த, அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன் ஏப்ரல் 18, 2018-ல் காலமானார். 

ராஜிந்தர் சிங் சச்சார்

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ராஜிந்தர் சிங் சச்சார், ஏப்ரல் 20, 2018-ல் டெல்லியில் காலமானார். 1985 ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதிவரை அவர் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

 பிரபல நடிகை ஸ்ரீதேவி

இந்திய சினிமா ரசிகர்களின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி, பிப்ரவரி 24, 2018-ல் துபாயில் காலமானார். இவர் மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். 

ஜான் யங்

அமெரிக்காவின் மிகுந்த அனுபவமுள்ள விஞ்ஞானியும், நிலவில் கால் வைத்தவர்களில் ஒருவருமான ஜான் யங் ஜனவரி 26, 2018-ல் காலமானார். இவர் இரண்டு முறை சந்திரனுக்குச் சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment