###TNPSC_New syllabus Tamil |
#புதிய பாடத்திட்டம் : எண்பேராயம் என்பது என்ன?
9ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்
#புதிய பாடத்திட்டம் : எண்பேராயம் என்பது என்ன?
முதல் பருவம் - பொதுத்தமிழ்
1) முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் நு}ல் எது? - கலித்தொகை
2) கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பாட்டன் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்ற நடுக்கல் உள்ள இடம்? - சேலம்
3) இந்திர விழா நிகழ்வானது மணிமேகலை காப்பியத்தில் எத்தனை நாட்கள் நடைபெறும்? - 28
4) ஐம்பெருங்குழு என்பது யாது? - அமைச்சர், சடங்கு செய்விப்போர், தூதர், சாரணர்(ஒற்றர்), படைத்தலைவர்
5) எண்பேராயம் என்பது யாது? - கரணத்தியலவர், கரும விதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர்
6) மணிமேகலையில் உள்ள மொத்த கதைகள் எத்தனை? - 30
7) மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர்? - சீத்தலைச் சாத்தனார்
8) சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் ? - சாத்தன்
9) தோரணவீதியும், தோமறு கோட்டியும் - இலக்கண குறிப்பு தருக. - எண்ணும்மை
10) காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இலக்கண குறிப்பு தருக - இரண்டாம் வேற்றும்மை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகள்
11) மாற்றுமின், பரப்புமின் - இலக்கண குறிப்பு தருக - ஏவல் வினைமுற்றுகள்
12) உறுபொருள் - இலக்கண குறிப்பு தருக - உரிச்சொல்தொடர்
13) தாழ்பூந்துறை - இலக்கண குறிப்பு தருக - வினைத்தொகை
14) சரியான கலைச் சொற்களை பொருத்துக.
அ) குமிழிக் கல் - 1) Tropical Zone
ஆ) நீர் மோலண்மை - 2) Conical Stone
இ) பாசனத் தொழில்நுட்பம் - 3) Water Management
ஈ) வெப்ப மண்டலம் - 4) Irrigation Technology
Ans: 2 3 4 1
15) தவறானவற்றை தேர்வு செய்க.
அ) தண்ணீர் தண்ணீர் - 1) கோமல் சுவாமிநாதன்
ஆ) தண்ணீர் தேசம் - 2) பாரதியார்
இ) வாய்க்கால் மீன்கள் - 3) வெ. இறையன்பு
ஈ) மழைக்காலமும் குயிலோசையும் - 4) மா. கிருஷ்ணன்
Answer: 2
No comments:
Post a Comment