2018 - ன் உலக அழகி யார் தெரியுமா
🌀 சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.
🌀 இந்தாண்டு உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தட்டிச் சென்றார்.
🌀 கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.
🌀 வனிசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் மாடலாகவும் மற்றும் நிகழ்ச்சி நடத்துபவராகவும் இருந்து வருகிறார்.
🌀 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 இளம்பெண்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த பிரமாண்ட அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனுக்கீர்த்தி பங்கேற்றார்.
🌀 இவர் இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் சுற்றில் 30 பேரில் அனுக்கீர்த்தி இருந்தார்.
🌀இரண்டாவது இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த 20 வயதான நிகோலெனே பிசபா லிம்ஸ்நுகன் பெற்றுள்ளார்.
🌀 அடுத்து மூன்று இடங்களை பெலாரஸ், ஜமைக்கா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.
No comments:
Post a Comment