###TNPSC CURRENT AFFAIRS -2018###முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018
கோச் நண்பன் எனும், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம்...!!
💥 பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், '181" என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 கோவையில் ரயில்களில் சுத்தம், சுகாதாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண, 'கோச் நண்பன்" எனும், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் 'சிறந்த ஏற்றுமதி" குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
💥 காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
💥 நாடு சுதந்திரம் அடைந்த பின், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக, அந்த மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம், தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முஸ்லிம் ஆவார்.
💥 பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு, போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் தொடங்கியது.
💥 2018ம் ஆண்டிற்கான பாலன் டி'ஓர்" விருதை, குரேஷியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் (வயது 33) வென்றுள்ளார்.
💥 காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான விழிப்புணர்விற்காக, நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50வது ஒன்றிய சர்வதேச மாநாடானது 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது. இம்மாநாட்டின் கருத்துரு : 'அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை" (Ending the Emergency : Science, Leadership, Action).
💥 கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் திறனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், எல்லை மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை எளிதாக்குதல் ஆகியவற்றிற்காக ஹாட்லைன் (HOT LINE) ஒன்றை அமைக்க இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
💥 பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான 'ஒபக்" (OPEC - Organisation of the Petroleum Exporting Countries) அமைப்பில் இருந்து கத்தார் விலகப் போவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment