🍀 கேரளாவைச் சேர்ந்த, ஆதித்யன் ராஜேஷ் என்ற 13 வயது சிறுவன், துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி, சாதனை படைத்துள்ளான்.
🍀 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்), பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த, கேட்ரியோனா கிரே தேர்வு செய்து மகுடம் சு+டியுள்ளார்.
🍀 பஞ்சாப் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
🍀 ஆளில்லா வான்வழி வாகனங்கள் தயாரிப்பதற்கான, இந்தியாவின் முதல் தனியார் துறை அலகு (UAV - Unmanned Aerial Vehicles) தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான, ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
🍀 பசுமை அமைப்புகளுக்கான 'கிரீன் கோ தங்க கேடய விருது - 2018" சென்னை பெரம்பபூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐஊகு)-க்கு வழங்கப்பட்டுள்ளது.
🍀 தேசிய தலைநகரப் பகுதியான, தில்லியின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய இரயில்வேயின் தேசிய இரயில் அருங்காட்சியகமானது, தில்லியின் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகமாகும்.
🍀 மத்திய கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்கான பாதுகாப்பான கடல்பகுதியை உறுதி செய்வதற்காக கடலோர காவல் படையானது 'ஆபரேஷன் ஆலிவா" (Operation Oliva) என்னும் பயிற்சியை தொடங்கியுள்ளது.
🍀 முதன் முறையாக கத்தாரை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு ( LNG - Liquified Natural Gas ) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது. நிலக்கரி மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றிற்கு அடுத்ததாக LNG ஆனது ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருளாகும்.
🍀 இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் உயரிய விருதான 2018ம் ஆண்டின் (54வது) ஞானபீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் 'அமிதவ் கோஷ்" என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🍀 உலகக்கோப்பை ஹhக்கி தொடரில், பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை தோற்கடித்து, பெல்ஜியம் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
🍀 அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST - National Commission for ST) புதிய செயலராக, 'அசோக் குமார் சிங்" என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 டென்னிஸ் விளையாட்டு வீரர், அசோக் அமிர்தராஜுக்கு, 'செவாலியே விருது" வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment