###TNPSC_CURRENT_AFFAIRS|இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான 'ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசினை பெற்ற நூல் எது?
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்துக்கும், இந்த ஆண்டில் இருந்து ′முதல்வர் விருது′ வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
🍀 தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள செல்வி அபூர்வா, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி தூர்தர்ஷனில் ராக் ராக் மெய்ன் கங்கா என்ற பயணக் கட்டுரையையும் மேரி கங்கா என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
🍀 மகாராஷ்டிரா மாநில அரசானது, குழந்தைகள் இறப்பைத் தடுப்பதற்காக, ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
🍀 வரலாற்றில் முதல் முறையாக, போப்பாண்டவர் அரபு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.
VAO தேர்வு வந்தாச்சு...!! அதற்கான பயிற்சியை தொடங்கிவிட்டீர்களா?
🍀 ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய நாடுகள் இணைந்து, ′அபெர்′ (ABER) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.
🍀 தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டு 150-வது ஆண்டை நினைவு கூறும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ′2019ம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை (The International Year of the periodic table 2019) ஆண்டாக′ அறிவித்துள்ளது.
🍀 மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம், சிக்கிமின் கேங்டாங் நகரத்தில் 'வடகிழக்கு சுற்றுப் பாதைக்கான மேம்பாடு" என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
🍀 ஆண்ட்ரி மேகின் என்பவர் எழுதிய லா வி டி′வின் ஹோம் இன்கோன்னு (Andrei Makine′s "La Vie d′un homme inconnu" - தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பானது, இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான 'ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசினை" வென்றுள்ளது.
🍀 இடைக்கால மத்திய பட்ஜெட் - 2019-ல் வரி விதிப்புக்குட்பட்ட தனிநபர் வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment