Tuesday, February 5, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS|ஐ.சி.சி.யின், 3 விருதுக்கு தேர்வாகியவர் யார்? |விமான பயணத்துக்காக, டிஜி யாத்ரா என்ற புதிய திட்டம் அறிமுகம்| 2019 |முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC_CURRENT_AFFAIRS|ஐ.சி.சி.யின், 3 விருதுக்கு தேர்வாகியவர் யார்?
விமான பயணத்துக்காக, டிஜி யாத்ரா என்ற புதிய திட்டம் அறிமுகம்!!  - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 'இராணுவ தொழில் வழித்தடம்" திருச்சியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

🍀 தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் பார் கோடு (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக் கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

🍀 சிவசேனையின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவுக்கு, ரூ.100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்ய, மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🍀 மத்திய அமைச்சரவை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் சுரங்கப் பாதுகாப்பை மேம்படுத்திட குயின்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா) மகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதலை அளித்துள்ளது.

🍀 உள்நாட்டு விமான பயணத்துக்கு, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட, ′டிக்கெட்′ எடுத்துச் செல்லாமல் பயணிக்கும்வகையில், ′டிஜி யாத்ரா′ என்ற, ′டிஜிட்டல்′ முறையிலான பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🍀 சீனாவின் மக்கள் தொகை, கடந்த 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது.

🍀 உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

🍀 G77-குழுவின் தலைமைப் பதவியை, எகிப்திய அரபுக் குடியரசிடமிருந்து, பாலஸ்தீனம் கைப்பற்றி உள்ளது.

🍀 இங்கிலாந்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கவும் ஜெட் பேக் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

🍀 2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின், 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி, ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வாகி வரலாற்று சாதனை படைத்தார். 


No comments:

Post a Comment