Sunday, February 17, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS|உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது? - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC_CURRENT_AFFAIRS|உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது? - 2019

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 சேவை மையத்தின் கட்டமைப்பை விரிவுப்படுத்த, சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.

🍀 காரைக்காலில் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க, 1950 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🍀 ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 நபர்கள் பட்டியலில், ′அர்ஜூன் ரெட்டி′ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே திரைத்துறையில் இருந்து தேர்வாகி உள்ளார்.

🍀 உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும், 27 கி.மீ., நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.

🍀 அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக, வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது.!

🍀 அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு, ′எச் 1 பி′ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍀 அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் உதவிக்காக, 202-322-1190 மற்றும் 202-340-2590 ஆகிய இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களை, இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

🍀 நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு, சீனா ரூ.17 ஆயிரத்து 750 கோடி நிதி வழங்குகிறது.

🍀 இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும், மின்னணு மயமாக்கப்பட்டு வருவதால், விரைவான சரக்கு ஏற்றுமதிக்கு மின்னணு, ′டேக்′ தொழில்நுட்பத்தை சுங்கத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

🍀 விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்போன் சேவைகளுக்காக, ஜிசாட்-31 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டன.

No comments:

Post a Comment