Tuesday, February 12, 2019

###TNPSC|CURRENT_AFFIARS|பாகிஸ்தானில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி ....!!

###TNPSC|CURRENT_AFFIARS|பாகிஸ்தானில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி ....!!

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, வெள்ளம், வறட்சி மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட, ஆறு மாநிலங்கள் (மஹhராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத்) மற்றும் யு+னியன் பிரதேசமான, புதுச்சேரிக்கு, 7,214 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

🍀 உத்தர பிரதேசத்தில், 36 ஆயிரம் கோடி ரூபாயில், 600 கி.மீ., நீளத்தில், ′கங்கை எக்ஸ்பிரஸ்வே′ எனப்படும், அதி விரைவு சாலை அமைக்கப்படும், என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

🍀 மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை, மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.

🍀 ஆக்ஸ்போர்ட் அகராதியானது 2018ஆம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக, “நாரி சக்தி” என்ற வார்த்தையை அறிவித்துள்ளது.

🍀 சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக, முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.


🍀 இணைய வசதியற்ற அல்லது அலைவரிசை துண்டிப்பு ஏற்படும் பகுதிகளில், குறுந்தகவல்கள் மூலம் தகவல் இணையச் சேவையை வழங்குவதற்காக, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பிரெஞ்சின் பி-பவுண்ட் என்ற நிறுவனத்துடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

🍀 மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை செயலர், ராஜீவ் நயன் சௌபே நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 உலக சுகாதார அமைப்பின் (றுர்ழு), தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநராக “டாக்டர். னம் கெத்ரபால் சிங்” (Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 பாகிஸ்தானில் சிவில் கோர்ட் நீதிபதியாக, சுமன் குமாரி என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாவது இது முதல்முறை.

🍀 பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு, ஆடியோ வடிவில் செய்தி அனுப்புவதற்காக, “ரோஷினி” என்ற மொமைல் செயலியை “ஐஐவு ரோபார்” என்ற அமைப்பு சண்டிகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.




அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment