###TNPSC_CURRENT_AGFFAIRS| கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்!!
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 செம்மொழி பூங்கா, மாதவரம் தோட்டக்கலை பண்ணை, தோட்ட கலைத்துறை அலுவலகம், தோட்ட கலைத்துறை பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
🍀 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்துள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதியின் கீழ், ஆண்டு தோறும், 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
🍀 மத்திய பட்ஜெட்டில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
🍀 சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ′கூகுள்′ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரத்து 80) அபராதம் விதிக்கப்பட்டது.
🍀 வெனிசுலா நாட்டு எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொதுத்தமிழ், பொது அறிவு, திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை, கிராம நிர்வாகம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் படி மிக துல்லியமாக தொகுக்கப்பட்ட 10 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!
🍀 அமெரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அறிவுசார் சொத்துகளை அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாக்கவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
🍀 இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் ரோபோக்கள் மூலம் கார்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
🍀 பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் ′பேஸ்புக்′ ′டுவிட்டர்′ போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த பாகிஸ்தான் ராணுவம் தடைவிதித்துள்ளது.
🍀 இலங்கையில் கண்டி நகரை கொழும்புடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிக்காக, சீனாவிடம் இருந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாக பெற உள்ளது.
🍀 ரிசர்வ் வங்கிச் சட்டம் (1934)இன் 2ஆவது அட்டவணயின் படி, நுளுயுகு சிறு கடன் வங்கி ஓர் அட்டவணை வங்கியாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment