Wednesday, June 9, 2021

#TNPSC|CURRENT_AFFAIRS_2021|உலகின் முதல் நானோ யூரியா திரவத்தை அறிமுகப்படுத்திய நாடு எது? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021

 #TNPSC|CURRENT_AFFAIRS_2021|உலகின் முதல் நானோ யூரியா திரவத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021


🌳 நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ----------- சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கணித்துள்ளது. - 9.5 சதவீதம்


🌳 எந்த மாநிலத்தின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளது? - சிக்கிம் 


🌳 தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவர் யார்? - அசன் முகமது ஜின்னா


🌳 எந்த மாநில அரசு பொறியியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளது? - பீகார்


🌳 நடப்பு நிதியாண்டில் தனியார் மயமாக்கப்பட எத்தனை பொதுத்துறை வங்கிகளின் பெயர்களை மத்திய அரசிடம் நிதி ஆயோக் சமர்பித்துள்ளது? - இரண்டு


🌳 அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் எந்த நாட்டு ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதித்தது? - சீனா


🌳 நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தின் (2020-2021) முதல் எட்டு மாதங்களில் எத்தனை சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது? - 13 சதவீதம்


🌳 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 4


🌳 உலகின் முதல் நானோ யூரியா திரவத்தை அறிமுகப்படுத்திய நாடு எது? - இந்தியா 


🌳 இந்திய கடற்படைக்காக எத்தனை நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.43,000 கோடியில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது? - 6 


No comments:

Post a Comment