உலகிலேயே அதிக உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி நீச்சல் குளம்
உலகிலேயே அதிக உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி நீச்சல் குளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லண்டனில் அமெரிக்கத் தூதரகம் அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு கட்டடங்களுக்கு நடுவே முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தில் குளிக்க அங்கு குடியிருப்பவர்களுக்கு மட்மே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணாடி நீச்சல் குளம் 10 அடி ஆழம் கொண்டது. இதில் 400 டன் தண்ணீர் வரை இருப்பு வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த ஆச்சரிய நீச்சல் குளம் தற்போது திறக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment