Monday, June 14, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS-2021| பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரித்துள்ள முதல் நாடு எது? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021

#TNPSC_CURRENT_AFFAIRS-2021|
பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரித்துள்ள முதல் நாடு எது?

நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

ஜூன் - 2021


🌷 சாகர் திட்டத்தின் கீழ் அந்தமான் கடல் பகுதியில் இந்தியா எந்த நாட்டு கடற்படையுடன் மூன்று நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை தொடங்கியுள்ளது? - தாய்லாந்து


🌷 பிரதமர் வீட்டு வசதி (நகர்ப்புற) திட்டத்தின் கீழ் எத்தனை லட்சம் வீடுகளை கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது? - 3.61 லட்சம்


🌷 நடப்பு நிதியாண்டில் 3-ஆவது தவணையாக எத்தனை மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை மானியமாக வழங்கியுள்ளது? - 17 மாநிலங்கள் 


🌷 தற்போது ------------ துறையில் 5ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. - ரயில்வே துறை


🌷 தற்போது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு எத்தனை ரூபாய் உயர்த்தி ரூ.1,940-ஆக நிர்ணயித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது? - ரூ.72


🌷 உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் எத்தனை இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது? - மூன்று 


🌷 எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக உள்ள ---------- என்பவரின் பதவிக்காலத்தை 9 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. - எம்.ஆர்.குமார் 


🌷 எந்த மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் இடங்களுக்கான உச்சவரம்பு 24-இல் இருந்து 42-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது? - தெலுங்கானா


🌷 மெய்நிகர் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்துள்ள முதல் நாடு எது? - எல் சால்வடார்


🌷 இதுவரை இல்லாத அளவாக எத்தனை லட்சம் டன் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது? - 418 லட்சம் டன்


No comments:

Post a Comment