#TNPSC_CURRENT_AFFAIRS-2021
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021
🌈 அசாம் அரசு எந்த வனவிலங்கு சரணாலயத்தை மாநிலத்தின் 7-ஆவது தேசிய பூங்காவாக அறிவிக்க முடிவு செய்துள்ளது? - டெஹிங் பட்காய்
🌈 2021 ஜூன் 22 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்? - மகேஷ்குமார் ஜெயின்
🌈 'இ-சஞ்சீவினி" மருத்துவ ஆலோசனை சேவையை பெறுவதில் 2-ஆவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு
🌈 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் கரிம பண்ணை பொருட்களின் ஏற்றுமதி எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளது? - 51 சதவீதம்
🌈 ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் முதல் இடத்தில் உள்ளவர் யார்? - கேன் வில்லியம்சன்
🌈 அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியவர் யார்? - ஆண்டர்சன்
🌈 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யாரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்? - சஞ்சய் யாதவ்
🌈 தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்? - ஷிகர் தவான்
🌈 தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் எந்த மாநிலம் 2-ஆம் இடம் பிடித்துள்ளது? - தமிழ்நாடு
🌈 நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தை 29:01.03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியவர் யார்? - லெட்சென்பெட் கிடி
No comments:
Post a Comment