நாம் கொடுக்கும் பணத்திற்குரிய ரத்த டெஸ்டுகள் செய்கிறார்களா?
பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்.
Dr.
V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
நம் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று அறிய மாஸ்டர் ஹெல்த் செக்கப்புகள் இன்றியமையாதவை.
நாற்பது வயதிற்கு மேல் அனைவரும், வருடம் ஒரு முறை முழு மாஸ்டர் ஹெல்த் செக்கப், மற்றும் வயிறு ஸ்கேன், எக்கோ, டிரட்மில் ஸ்கேன்கள் செய்வது நல்லது என நினைக்கும் மருத்துவர்களில் ஒருவன் நான்.
அமெரிக்காவில் ஒருவர் இன்சுரன்ஸ் இல்லாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுக்க நினைத்தால், பாதி சொத்தை விற்று தான் பில் செட்டில் செய்ய வேண்டும். ஐரோப்பா, அரபு நாடுகள், ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் ரத்த டெஸ்டுகளின் விலை மிக அதிகம். உலகிலேயே மிகவும் விலை கம்மியாக மாஸ்டர் ஹெல்த் செக்கப்புகள் இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே சாத்தியம். அதற்கு நாம் மார் தட்டிக் கொள்ளலாம்.
இந்தப் பெருமை ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு நீங்கள் ஒரு மருத்துவமனைக்கோ, அல்லது ஒரு சிறந்த லேபிற்கோ செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் கட்டும் பணத்திற்கு முழு அளவிற்கான டெஸ்டுகள் கிடைக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் என் பதில்.
முதலில் ஒரு பேசிக் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் என்ன செய்கிறார்கள்
என பார்ப்போம்.
1. CBC எனும் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த செல்கள் எண்ணிக்கை
2. சுகர் டெஸ்ட்- வெறும் வயிற்றில் and/or சாப்பிட்ட பின்பும்
3. கொலஸ்டிரால் டெஸ்டுகள்
4. லிவர் டெஸ்டுகள்
5. கிட்னி டெஸ்டுகள்
6. தைராய்டு டெஸ்டுகள்
7. யூரின் டெஸ்ட்
8. Electrolytes
9. calcium
90% லேபுகள் மற்றும் மருத்துவமனைகள் (கார்பரேட் உட்பட) மேலே உள்ளதை மட்டும் செய்கிறார்கள். கொஞ்சம் பேர் மட்டும் கணைய டெஸ்டுகள், மூன்று மாத சர்க்கரை அளவான HbA1c போன்ற சில முக்கயமான, தேவையான எக்ஸ்ட்ரா டெஸ்டுகளையும் செய்கிறார்கள்.
மேலே சொன்ன டெஸ்டுகளுக்கு ரூ. 2000 முதல் Rs. 5000 வரை இடத்திற்கு தகுந்தாற்போல் வாங்குகிறார்கள். ஆம்னி பஸ் போலத்தான். விலைக்கட்டுப்பாடு என்பதே கிடையாது.
கேட்டால், நாங்கள் ISO தரச்சான்றிதழ் வாங்கிருக்கோம்
என்று சிலர் சொல்வார்கள். சில லேப்கள், எப்போதோ ISO வாங்கி இரண்டு வருடங்கள் கழித்த பின் புதுப்பிக்காமலையே, 'நாங்கள் ISO லேபாக்கும்' என்று சொன்ன காமெடியெல்லாம்
இங்கு நடந்திருக்கிறது.
லேபில் பல பிரிவுகள் உள்ளன. Biochemistry,
Pathology, Hematology, Histopathology, Microbiology என பத்துக்கும் மேல் பிரிவுகள்-உப பிரிவுகள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவு/உப-பிரிவிற்கு மட்டும் ISO வாங்கி விட்டு, ISO சிம்பலை பொதுவாக ரிப்போர்ட் தாளில் அச்சடிக்கும் பழக்கமும் இந்தியாவில் உண்டு.
எந்த டாக்டரும் தவறான ரிசல்டை தொடர்ந்து தரும் லேபிற்கு பேஷண்டை அனுப்ப மாட்டார். குவாலிடி இல்லாமல் ரிசல்ட் தந்தால் எங்களுக்கு சில ரிப்போர்ட்களை பார்த்தவுடனே தெரிந்து விடும். பின்னர் அந்த லேபிற்கு பேஷன்டை அனுப்ப மாட்டோம். இல்லாவிட்டால் எங்களுக்கு பேஷன்ட் வருவதும் குறைந்து விடும். ISO இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவில் முக்கால்வாசி லேப்கள் தரத்தில் சிறந்து விளங்குகின்றன என்பது என் அனுபவம். ISO பெற, அதை வழங்கும் நிறுவனம் சொல்லும் விதிகள் மிக மிக அதிகம். அவர்கள் சொல்லும் டாகுமேண்டேஷனுக்கு மட்டுமே எக்ஸ்ட்ராவாக பத்து பேரை வேலைக்கு வைக்க வேண்டும். அதனாலேயே பல நல்ல குவாலிடி லேப்கள் ISO பெறுவதில்லை. அதனால் ISO இல்லாத பல லேப்களும் நல்ல தரமானவை தான் என்பதை அறிக.
லேப்களிலும்,
மருத்துவமனைகளில் இருக்கும் லேப் ஊழியர்களின் சம்பளம் மிகவும் கம்மி. ரூ. 4000 மாத சம்பளத்திற்கு நானே இரு டெக்னீஷியன்களை வைத்து இரண்டாண்டுகளுக்கு முன் லேப் நடத்தியிருக்கிறேன். பத்தாயிரத்திரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் வேலை பார்க்கும் டிப்ளமோ, கிராஜுவேட், போஸ்ட் கிராஜுவேட் இருக்கிறார்கள்.
பாவம். இவ்வளவு கம்மியான சம்பளத்திற்கு ஆட்கள் இருந்தும், ஏன் பணம் அதிகம் வாங்குகிறார்கள்?
சில டெஸ்டுகள் செய்ய தேவைப்படும் கெமிக்கல்களை கம்மியான அளவில் வாங்கினால் அதன் விலை அதிகம். அதன் ஆயுளும் குறைவு. பல்க்காக வாங்கினால் விலை குறைவு. அதனால் அதிகம் பேஷன்ட் வரும் லேப்களுக்கும்
மருத்துவமனைகளுக்கும் டெஸ்ட் எடுக்க தேவைப்படும் கெமிக்கல்களின்
விலை சல்லிசாக கிடைக்கும். அப்போதும் அவர்கள் டெஸ்டுகளின் விலையை குறைப்பதில்லை.
ஒரு நன்றாக ஓடும் லேப்/ மருத்துவமனையின் மேலே சொன்ன மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்கான
என் பார்வையில் ஏற்படும் செலவைப் பார்ப்போம்.
1. CBC Rs. 60
2. யூரின் ரொட்டின் Rs. 50
3. சுகர் டெஸ்ட் Rs. 10-20
4. Lipid profile-Rs. 200
5. Liver function test- Rs. 250
6. Kidney function Test- Rs.150
7. Thyroid profile-Rs. 125
8 Electrolytes - Rs. 60
9. Calcium- 100 என
மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட ஆகாது. லாபம் வைத்தாலும் 1200 மேல் தர ஒன்றும் இல்லை.
நீங்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப் போகும் இடத்தில், கீழ்கண்ட சில டெஸ்டுகளும் எனக்கு வேண்டும், இதற்கு எவ்வளவு ஆகும் எனக் கேளுங்கள்.
1. Hscrp எனும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயம்
2. Homocysteine
3. Apo A, Apo B
4. Lipoprotein A எனும் இதய டெஸ்டுகள்
5. Microalbuminuria, Urine Albumin/ Creatinine ratio எனும் கிட்னி பிரச்சினையை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிய வைக்கும் டெஸ்டுகள்
6. Testosterone எனும் இரு பாலருக்கான முக்கிய ஹார்மோன் டெஸ்ட்
7. Insulin எனும் முக்கிய மெட்டபாலிக் டெஸ்ட்
8. Vitamin D &
9. Vitamin B12 எனும் முக்கிய வைட்டமின்கள்.
அவர்களின் முதல் கேள்வி, "இதெல்லாம் எதுக்கு? தேவையே இல்ல" என்பார்கள். அடுத்த பதில் (மேலதிகாரியிடம் கால் மணி நேரம் பேசிய பின்), "இங்கேயே செய்யலாம், ரூ.15000 முதல் 30000 ஆகும் சார்" என்பார்கள். மூன்றாவது பதில் "வேற லேப்ல கொடுத்து எடுக்குறோம் ரூ.5000-10000 ஆகும் சார்" என்பார்கள்.
வழக்கமாக எடுக்கும் மாஸ்டர் செக்கப்புகள் நார்மலாக இருப்பினும், நான் மேலே சொன்ன 9 ஸ்பெஷல் டெஸ்டுகள் அப்நார்மலாக இருக்கும் ஆயிரக்கணக்கான பேஷண்டுகளை நானே கிளினிக்கில் பாத்திருக்கிறேன். பிரச்சினையை அறிந்தால் தானே அதை சரி செய்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்?
தமிழ்நாடு முழுதும் நான் மேலே சொன்ன அனைத்து டெஸ்டுகளையும்
செய்ய 1800 ரூபாயில் சில லேப்கள் செய்கின்றன. வீட்டிலேயே ரத்தம் எடுக்கும் வசதியும் உண்டு.
1. Orbitoasia Lab- Essentials Package
2. Arthi Scans- Beginner's Package
3. Thyrocare Labs- Aarogyam 1.4 package
ஸ்கேன்கள் மட்டும் அவர்கள் செண்டரிலோ அல்லது விலை குறைவான உங்கள் அருகில் இருக்கும் செண்டரிலோ எடுக்க வேண்டியது தான்.
அவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்?
ஏதாவது ஃபிராடு வேலையோ? இல்லை. அவர்கள் நிறைய சாம்பிளை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து செய்வதால் விலை குறைகிறது, உலகத்தரத்தில் செய்கிறார்கள்,
அவர்களுக்கு விலையை குறைத்து அதிக பேஷன்டுகளை கவரும் பிசினஸ் சென்ஸும், கொஞ்சம் மனசாட்சியும், இருக்கிறது. அவ்வளவு தான்.
எப்படி சூப்பர் மார்கெட்டுகள் வந்த பின்னர், மளிகை கடைகள் அடி வாங்கியதோ, அதே போல் சில நல்ல லேப்களின் வருகையால் அதிகம் பணம் வசூலிக்கும் லேப்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அடி விழப் போவது சீக்கிரமே நடக்கப்போகிறது. மக்கள் விழித்தெழாவிட்டால் அவர்கள் பர்ஸ் கரைவது உறுதி. இனிமேல் இந்த டெஸ்டுகள் செய்யுங்கள். மற்ற லேப்களுக்கு வருமானம் குறைந்து, போட்டிக்கு செல்போன் கம்பெனி போல லேப் டெஸ்ட் விலையைக் குறைப்பார்கள். கார்ப்பரேட் முதலாளிகள், மருத்துவத்தில் கொஞ்சமாவது லாபம் கம்மியாக பார்த்து மக்களுக்கு கொஞ்சம் சேவை மனப்பான்மையுடன் இருந்தாலே போதும்.
மாதம் முந்நூறு ரூபாய்க்கு செல்போனில், இந்தியா முழுக்க எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், நெட்டில் தினமும் ஒரு படம் பார்க்கலாம். ஐயாயிரம் ரூபாய்க்கு மலேசியாவே போகலாம். கொடுக்கும் பணத்திற்கு கரெக்டான சேவை என்பது நமது உரிமை.
கார்ப்பரேட்
லேப்களும், பெரிய மருத்துவமனைகளும் இதை ஃபாலோ செய்தால் தொடர்ந்து தொழிலில் இருக்கலாம். இல்லாவிட்டால் ஈ ஓட்ட வேண்டியது தான் என்பது எனது சொந்த தாழ்மையான கருத்து.
Note: இதைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது? முதல் தகுதி, நான் ஒரு மருத்துவன். இரண்டாவது நான் ஒரு பயோகெமிஸ்ட்ரி
டாக்டர். அதாவது லேபில் இருந்து ரிப்போர்ட்டுகளுக்கு கையெழுத்து போடும் டாக்டர். மூன்றாவது நான் ஒரு இந்திய குடிமகன் - கொடுக்கும் காசுக்கு எல்லோருக்கும்
விலைக்கு நிகரான தரமான பொருள் வேண்டும் என நினைப்பவன்.
கொடுக்கும் காசுக்கு எல்லோருக்கும் விலைக்கு நிகரான தரமான பொருள் வேண்டும் என நினைக்கும்
ஒருவரிடமிருந்து
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment