Saturday, June 23, 2018

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்


வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்


நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.



இத்தகவல்கள் இயற்கை மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவர் குழுவினரிடமிருந்து பெறப்பட்டது....

இவ்விடம் பதிவிடுவது 

த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


No comments:

Post a Comment