உடல்வலி, மூலம், முடி வளர!
குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.
பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.
இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,
இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே கால் குவளையாக வரும் வரை காய்ச்சி, காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.
நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.
..........
..........
சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 மற்றும் பகுதி -2 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..
Part -1
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.
No comments:
Post a Comment