Sunday, October 7, 2018

தினமும் ஒரு சிறுதானியம் சமையல் ( குதிரைவாலி கம்பு,இட்லி,தோசை)

தினமும் ஒரு சிறுதானியம் சமையல் ( குதிரைவாலி கம்பு,இட்லி,தோசை)


இன்று 

குதிரைவாலி கம்பு,இட்லி,தோசை

தேவையானவை;

குதிரைவாலி - ஒரு கப்,
கம்பு - ஒரு கப்,
உளுந்து - ஒரு கைப்பிடி,
வெங்தயம் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை;

மேலே சொன்ன எல்லாவற்றையும் ( உப்பு தவிர்த்து ) 5 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு வெட் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றிப் பானையில் வைத்து வேக வைக்கவும்.நன்கு வேக வைத்த பிறகு, இட்லி தட்டில் ஊற்றி ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து சிறிது ஆறிது பிறகு இட்லிப் பானையினை திறந்து பார்த்தால் சுவையான குதிரைவாலி கம்பு இட்லி ரெடி.

இதே மாவைக் கொண்டு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசையாகவும் வார்க்கலாம்.


No comments:

Post a Comment