Tuesday, August 21, 2018

மனித உடம்பின் 99 இரகசியங்கள் - பகுதி - 2

மனித உடம்பின் 99 இரகசியங்கள் - பகுதி - 2



31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை/கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்…

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன…

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது…

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்…

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே…

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது…

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்…

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே…

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்…

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன…

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்…

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது…

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்…

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்…

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது…

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்…

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…



மனித உடம்பின் 99 இரகசியங்கள் - பகுதி - 1, 
என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/08/99-1.html?m=0

மனித உடம்பின் 99 இரகசியங்கள் - பகுதி - 3
பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்


முட்டையை  தினமும் உட்கொண்டால் என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

அல்பென்டாசோல் - மாத்திரை குறித்த பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.







பிக்மி எண் PICME: Pregnancy and Infant Cohort Moni...  என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.








இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment