பொது அறிவு - உப்புகள் பற்றிய முக்கிய குறிப்புகள்..! 2019
பொது அறிவு - வேதியியல் - உப்புகள் பற்றிய குறிப்புகள் - பகுதி-1
உப்பு
➤ உப்பு என்றாலே வறுவல்களில் சேர்க்கப்படும் ஒரு வெண்மையான சேர்மம் என்று உங்கள் நினைவிற்கு வரலாம். ஆனால், அது சாதாரண உப்பு எனப்படும் ஓர் உப்பு ஆகும். மேலும், பல உப்புகள் பல வகைகளில் பயன்படுகின்றன.
➤அமிலங்களுக்கும் காரங்களுக்குமிடையே நிகழும் நடுநிலையாக்கும் வினையின் மூலம் கிடைக்கும் விளைபொருள்களே உப்புகளாகும். உப்புகள் நீரில் கரைந்து நேர் மற்றும் எதிர் அயனிகளை உருவாக்குகின்றன.
உப்புகளின் வகைகள்
1. சாதாரண உப்புகள்:
ஓர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின்போது சாதாரண உப்பு கிடைக்கிறது.
2. அமில உப்புகள்:
இவை உலோகமானது அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் உருவாகின்றன. பல காரத்துவ அமிலத்தை கணக்கிடப்பட்ட அளவு காரத்தோடு சேர்க்கும்போது பெறப்படுகின்றன.
3. கார உப்புகள்:
இவை இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவக் காரங்களிலுள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகின்றன. ஒரு கார உப்பு, மேலும் அமிலத்துடன் சேர்ந்து சாதாரண உப்பை உருவாக்குகிறது.
4. இரட்டை உப்புகள்:
சமமான மூலக்கூறு எடைவிகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்துப் படிகமாக்கும்போது இரட்டை உப்புகள் உருவாகின்றன.
எ.கா. பொட்டாஷ் படிகாரம்
உப்புகளின் பயன்கள்
சாதாரண உப்பு (NaCl)
இது நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.
சலவைசோடா (Na2SO3)
1. இது கடின நீரை மென்நீராக மாற்றப் பயன்படுகிறது.
2. இது வீடுகளில் சுத்தப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது.
சமையல் சோடா (NaHCo3)
1. இது ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது. ரொட்டிச்சோடா என்பது சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவையாகும். இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
2. இது அமில நீக்கியில் உள்ள ஒரு பகுதிப்பொருள். இந்தக் கரைசல் காரத்தன்மை பெற்றிருப்பதால் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
சலவைத் தூள்(CaOCl2)
1. இது குடிநீரிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுகிறது.
2. இது பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.
பாரிஸ் சாந்து(CaSO4. (1/2)H2O)
இது முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கவும் மற்றும் சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுகிறது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC -கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்..
www.kavimalaravan.blogspot.com
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment