Thursday, December 27, 2018

####ஆசிய அளவில் புதிய சாதனை...!! - ###2018 -முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

ஆசிய அளவில் புதிய சாதனை...!! -  2018
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 கஜகஸ்தான் நாடானது கூடுதல் வர்த்தக கூட்டிணைவிற்காக, குஜராத் மாநிலத்தில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளது.

🍀 கனடாவில் கிட்டத்தட்ட கோழி முட்டை அளவில் வைரம் ஒன்று சுரங்கத்தில் கிடைத்துள்ளது.

🍀 கர்நாடகாவில் உள்ள கைகா அணுமின் நிலையத்தின், அணு உலை 941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி, உலக சாதனை படைத்துள்ளது.

🍀 கோவாவின் பிரதேமேஷ் மௌலிங்கர், மிஸ்டர் சுப்பராநேஷனல் (தேசம் கடந்தவர்) 2018 என்ற பட்டத்தை, வென்ற முதல் ஆசியர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர், என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

🍀 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 8 வயது சிறுமி சம்யுக்தா, தலைமுடியால் காரை இழுத்து, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

🍀 மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல் நாத் பதவி ஏற்றுக்கொண்டார்.

🍀 இலங்கை பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 

🍀 நியூ இந்தியா ஆஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக (Chairman and Managing Director - CMD) அதுல் சஹாய் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

🍀 ESCP ஐரோப்பாவின் மிக உயர்ந்த கௌரவ 'டாக்டர் ஹானோரிஸ் கவுசா" பட்டத்தை பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல் பெற்றுள்ளார்.

🍀 மத்திய அரசின் விவசாயத்துறை சார்பில் வழங்கப்படும், விவசாயத்தின் மேம்பாட்டுக்கான 'கிரிஷி கர்மன்"(KRISHI KARMAN AWARD) விருது, "ஜார்கண்ட்" மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

🍀 இஸ்ரேலிலுள்ள துறைமுகம் ஒன்றில், 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்தாக நம்பப்படும், தங்க காசுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

🍀 சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி, கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment