TNPSC | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
200 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை எங்கு அமைய உள்ளது?
தமிழக வனத்துறை தேர்வு, 2018

🌟 பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🌟 உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, 'சிங்கப்பு+ர் பின்டெக்" என்ற மாநாடு சிங்கப்பு+ரில் நவம்பர் 12 முதல் நவம்பர் 16 வரை நடைபெற உள்ளது.
🌟 குஜராத் மாநிலத்தின் 'அகமதாபாத் பெயரை கர்னாவதி" என மாற்ற, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
🌟 எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹhவுக்கு, பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
🌟 கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யும், ரஷியாவில் அமைந்துள்ள வால்கோடோன்ஸ்க் நகரின் ஒரு பகுதிக்கு 'கூடங்குளம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
🌟 தீபாவளி பண்டிகையையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை, சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
🌟 சீனாவின் ட்சே சியாங் மாநிலத்தின் வு+ஜென் நகரில் 5வது சர்வதேச இணைய மாநாடு நடைபெற்றது.
🌟 அயோத்தியில் 200 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை அமைக்க, உத்தரப்பிரதேச மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது.
🌟 பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🌟 வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் முதலீடுகளுக்கான முதல் மாநாடு நாக்பு+ரில் நடைபெற்றது.
No comments:
Post a Comment