Saturday, May 30, 2020

பித்தப்பை கற்கள் குணமாக என் நண்பணின் அனுபவ மருந்து.

பித்தப்பை கற்கள் குணமாக
என் நண்பணின் அனுபவ மருந்து.



                      மஞ்சள் கரிசாலை 15மிலி
சுத்தமான தேன் 25மிலி

இவை இரண்டையும் நன்றாக கலந்து காலை மாலை இரு வேளையும் தரவும்...

இரவு தர வேண்டிய மருந்து

விளக்கெண்ணெய் - 1லி

வெள்ளை பூண்டு சாறு - 500மிலி

இந்துப்பு - 30கி

பெருங்காயம் - 10கி

எல்லாவற்றையும் சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி வடிகட்டி கொண்டு 60மிலி பசும்பாலில் 30மிலி இந்த எண்ணெயை நன்றாக கலந்து இரவு படுக்கும் முன்பு கொடுக்க வேண்டும்...

மலம் நன்றாக கழியும் இது போல் 40 நாட்கள் தொடர்ந்து செய்யவும்...

பித்தப்பை கற்கள் உருவாகாமல் இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

சித்தர்கள் கைகண்ட மருத்துவ முறைகள் என்ற பழைய நூலில் தேடி இம்முறையை எடுத்தேன்

அகத்தியம்.

Saturday, March 14, 2020

செல்சிதைவை தடுப்பதோடு, புற்று நோய் வராமல் தடுக்கும் வெள்ளரிக்காய்

செல்சிதைவை தடுப்பதோடு, புற்று நோய் வராமல் தடுக்கும் வெள்ளரிக்காய்!



வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன. விட்டமின் சி  நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய்  வராமல் தடுக்கும்.

1. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்த கலவைகளை போட்டு இவற்றுடன் இளநீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை  மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்.

2. வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உல்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக  நிற்கும். அதிலும் இதனை கேரட் சாறுடன் சேர்த்து பருகும்போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

3. வெள்ளரிக்காய், பாதியளவு எலுமிச்சை, புதினா இலை ஒரு கையளவு, உப்பு சிறிதளவு, எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.

4. வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி  ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்.