Friday, August 9, 2019

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்..!! பொதுத்தமிழ்

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்.
பொதுத்தமிழ் 


பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்!!
💢 ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று. இது, நுண்ணிய நு}ல்பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை.

💢 இது, மக்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையது.

💢 மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர் ஆவர்.

பேச்சும் மேடைப்பேச்சும்

💢 பேச்சு வேறு, மேடைப்பேச்சு வேறு. வெறும்பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.

💢 பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது, ஆனால் மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்

💢 மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி என்றாலும் அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.

💢 பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல் வேண்டும்.

💢 அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்தமொழி நடை ஆகும்.

முக்கூறுகள்

💢 பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவதனையே பேச்சுமுறை என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம்.

எடுத்தல்

💢 பேச்சைத் தொடங்குவது எடுப்பு ஆகும்.

💢 மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தான் விதைக்க முடியும் என்பதனைப் போலக் கேட்போரைத் தன்வயப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இடத்திற்கும் சு+ழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.

தொடுத்தல் முறை

💢 தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும்.

💢 பேச எடுத்துக்கொண்ட செய்தியின் நுட்பங்களையும் கருத்துக்களையும் பல தலைப்புகளின்கீழ் வரிசைப்படுத்தி, ஓர் ஓவியன் பல வண்ணம் தீட்டி, இயற்கை வனப்பை உருவாக்கிக் காட்டுதல்போலப் பேசுதலே ஒரு பேச்சாளரின் கடமையாகும்.

முடித்தல்

💢 பேச்சைத் தொடங்குவதிலும் பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும்.

💢 நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு என்பது தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம்.

Tuesday, August 6, 2019

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ் இலக்கணக் குறிப்பறிதல்

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ்
இலக்கணக் குறிப்பறிதல்


பண்புத்தொகை

💢 பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். பண்புப்பெயரும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லிற்கும் இடையில் 'மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன எனும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா
நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் - வட்டம், சதுரம்
சுவையைக் குறிக்கும் சொற்கள் - இனிமை, கசப்பு
குணத்தைக் குறிக்கும் சொற்கள் - நன்மை, தீமை
எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எ.கா 
வெண்கரடி - வெண்மை + கரடி
வட்டக்கோடு - வட்டம் + கோடு
பெருங்கடல் - பெருமை(பெரிய) + கடல்
செவ்வேள் - செம்மை + வேள்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

💢 இரண்டு பெயர்ச்சொற்கள் இணைத்து எழுதப்படும்போது அவற்றின் இடையில் 'ஆகிய" அல்லது 'ஆன" என்ற சொல் மறைந்து நின்று பொருள் தருவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வரும்.


எ.கா 
தாமரை மலர் - இதில் தாமரை சிறப்புப் பெயர், மலர் பொதுப்பெயர் ஆகும்.
வெள்ளை மலர்(வெள்ளையான மலர்)
ஆண்மயில் (ஆணான மயில்)

வினைத்தொகை

💢 இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பது வினைத்தொகை எனப்படும். அதாவது வினைத்தொகையில் இரு சொற்களே இருக்கும். முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
செய்வினை
செய்த வினை - இறந்தகாலம்
செய்கின்ற வினை - நிகழ்காலம்
செய்யும் வினை - எதிர்காலம்

வினைத்தொகையை கண்டறியும் முறை

💢 வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும், இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
சுடுசோறு
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு(எதிர்காலம்)

உவமைத்தொகை

💢 இரண்டு சொற்களுக்கு இடையே போல, போன்ற, அன்ன, நிகர என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உவமை முதலிலும், உவமேயம் பின்னும் வரும்.

எ.கா
கனிவாய், மலரடி
'கனிவாய்" என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானால் 'போன்ற" உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே 'கனிவாய்" என்பது உவமைத்தொகையாகும்.