GST வரிவசூலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி வசு+லித்தலில், தமிழ்நாடு 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டு மொத்தமாக ரூபாய் 70.792 கோடிகள் வரி வசு+லித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
🍀 பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில், சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்றுள்ளது.
🍀 அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து 7.62 மி.மீ. வகை நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
🍀 நாட்டிலேயே முதன்முறையாக, திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்ற வழக்கறிஞர் ஒருவருக்கு, சாதியில்லா- மதமில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
🍀 இமாச்சலப் பிரதேசத்தின் உணவு சேகரிக்கும் முறைக்கு ஊக்கமளித்து, உணவு வீணாவதை தடுப்பதற்காக, அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவானது, 'உனா மாவட்டத்தில்" அமையவுள்ளது.
🍀′சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, மத்திய அரசு வழங்கவுள்ள, 6,000 ரூபாய் உதவித் தொகையுடன், கூடுதலாக, 4,000 ரூபாய் சேர்த்து, 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்,′ என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
🍀 எம்.ஆர்.எஃப் சாலஞ்ச் பட்டத்தை (MRF Challenge title) வென்ற முதல் பெண் ஓட்டுநர் எனும் பெருமையை, இங்கிலாந்தின் ஜாமி சாட்விக் (Jamie Chadwick) பெற்றுள்ளார்.
🍀 இஸ்ரேல் நாட்டின் ′மில்லியன் டாலர் டான் டேவிட் பரிசு′ (Million Dollar Dan David Prize), இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியத்திற்கு, அவரது, ′Inter-cultural encounters between Asians, Europeans and people of North and South America during the early modern era′ என்ற வரலாற்று ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment