Monday, May 14, 2018

சீத்தா பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள்.

சீத்தா பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள்.




பழங்களில் சீத்தா பழம் தனி சிறப்பு உடையது. இதனை சுகர் ஆப்பிள் என்றும் அழைப்பர், இப்பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளன .
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. இந்தகைய சத்துக்கள் அடங்கிய சீதாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து.சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.





மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூடன் இணையுங்கள்


ஒரு முறை மேலே உள்ள வலைப்பூவை  Mobile view ல் இருந்து Web view version ல் பாருங்கள்.

உங்களின் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்

நன்றி


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment