நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்த இனிப்பு துளசி(Stevia)
![]() |
சீனித்துளசி (அ) இனிப்புத்துளசி |
நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்
அறிமுகம்:
ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டை தாயகமாக கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரப்படுகிறது. மேலும் இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.
இனிப்பு துளசியின் முக்கியத்துவம்:
மனிதனின் தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்கரையானது கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டதே ஆகும். கரும்புச் சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.
தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தலாம். ஏனெனில் இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை கலோரிகளை உருவாக்குவதில்லை.
ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.
இனிப்பு துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:
இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside ) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) எனும் வேதிப்பொருள்களே இனிப்புத் தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத்துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது.
மேலும் ஸ்டிவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்கரையை விட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்பு துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டிவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.
மேலும் உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.
இனிப்பு துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:
1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.
2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.
3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
5.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.
சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 மற்றும் பகுதி -2 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..
Part -1
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.
நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment