கொழுப்பை குறைக்கும் பாகற்காய் இலை டீ - இயற்கை மருத்துவம்
பாகற்காய் இலை டீ
தேவையான பொருட்கள் :
பாகற்காய் இலை - 2 கைப்பிடி இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
தேன் - சுவைக்கு, தண்ணீர் - 300 மி.லி.
செய்முறை :
• நீரில் பாகற்காய் இலையை இட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
• நன்கு கொதித்ததும் அத்துடன் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து பருகவும்.
• இந்த டீ இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளும் ஒரளவு இதை பருகலாம்.
மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment