#TNPSC|பொது அறிவு வினா விடைகள் - இந்திய தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பொது அறிவு வினா விடைகள்
💠பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்தி செய்யும் கலைக்கு ---------------- என்று பெயர். - தாவர பயிர் பெருக்கம்
💠பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் நு.போர்லாக் எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றார்? - 1970
💠இந்தியாவின் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து, பசுமை புரட்சியைக் கொண்டு வந்தவர் யார்? - டாக்டர் மா.சா. சுவாமிநாதன்
💠விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் ------------- என்று அழைக்கப்படுகின்றன. - எச்ச உறுப்புகள்
💠ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் ------------ ஆகும். - புதைவடிவப் பறவை
💠புதை வடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு -------------- என அழைக்கப்படுகிறது. - தொல்லுயிரியல்
💠தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - லியோனார்டோ டாவின்சி
💠உயிர்வழித் தோற்ற விதி அல்லது வழிமுறைத் தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர் யார்? - எர்னஸ்ட் ஹெக்கல்
💠1809-ல், லாமார்க்கின் பரிமாணக் கோட்பாடுகள் எந்த நூலில் வெளியிடப்பட்டது? - ஃபிலாச்ஃபிக் ஜுவாலஜிக்
💠டார்வின் தன்னுடைய பதிவுகளை ---------- என்ற பெயரில் 1859-ம் ஆண்டு வெளியிட்டார். - சிற்றினங்களின் தோற்றம்
💠இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியவர் யார்? - சார்லஸ் டார்வின்
💠தொல் தாவரவியல் என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது? - கிரேக்க மொழி
💠தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - கஸ்பர் மரியா வான் ஸ்டென்பெர்க்
💠பொகிமியன் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டவர் யார்? - கஸ்பர் மரியா வான் ஸ்டென்பெர்க்
💠இந்திய தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - பீர்பால் சகனி
No comments:
Post a Comment