TNPSC | பொது அறிவு வினா விடைகள் - தமிழகத்தில் சிறு ஏரிகள் எத்தனை உள்ளன?
பொது அறிவு வினா விடைகள்!!
✍ 2001-ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் எத்தனை விழுக்காட்டினர் வேளாண்துறையிலிருந்தனர்? - 49.3 விழுக்காடு
✍ தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் --------------- விவசாயிகள் ஆவர். - குறு விவசாயிகள்
✍ தமிழகத்தில் குறு விவசாயிகள் எத்தனை விழுக்காடு உள்ளனர்? - 78 விழுக்காடு
✍ தமிழகத்தில் குறு விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு மொத்தச் சாகுபடியில் எத்தனை விழுக்காடு? - 36 விழுக்காடு
✍ தமிழகத்தில் 2012 - 13-ஆம் ஆண்டில் மொத்தமாகப் பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பளவில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன? - 72 விழுக்காடு
✍ தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு எத்தனை விழுக்காடு ஆகும்? - 57
✍ தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ---------- மழையாகும் . - வடகிழக்கு பருவ (அக்டோர் - டிசம்பர்)
✍ தமிழகத்தில் எத்தனை வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோ மீட்டர் தூரம் பாய்கின்றன? - 2,239
✍ தமிழகத்தில் சிறு ஏரிகள் எத்தனை உள்ளன? - 7,985
✍ தமிழகத்தில் பெரிய ஏரிகள் எத்தனை உள்ளன? - 33,142
✍ தமிழகத்தில் ஏறத்தாழ 3.68 லட்சம் ஹெக்டேர் பரப்பு ------------ வாயிலாக நீர் பெறுகின்றன. - ஏரிகளின்
✍ தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு ---------- நீரையே நம்பி இருக்கிறது. - நிலத்தடி
✍ நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் கண்காணிக்கும் வாரியம் எது? - மத்திய நிலத்தடி நீர் வாரியம்
✍ தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் அளவுக்கதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன? - 139
✍ தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் மட்டுமே நிலத்தடி நீரின் அளவு குன்றாமலும் தரம் குறையாமலும் உள்ளன? - 136
No comments:
Post a Comment