Pages

Tuesday, December 18, 2018

##TNPSC தேர்வு - 2018 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !! ##TNPSC CURRENT AFFAIRS -2018


உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில், தமிழக நகரங்கள்..!! 


##TNPSC தேர்வு - 2018
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
##TNPSC CURRENT AFFAIRS -2018



💥 குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

💥 டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையில் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ரோஷினி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

💥 டாலர் மற்றும் யூரோவுக்கு பதிலாக ரூபாயை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

💥 ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிஜு பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

💥 வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன. 



💥 சென்னையைச் சேர்ந்த, நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி இளைஞர் ஸ்ரீராம் சீனிவாஸ், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின், 'ரோல் மாடல்" விருது பெற்றார்.

💥 ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கில், ரயிலின் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இந்திய ரயில்வே வாரியம் சாதனை படைத்துள்ளது.

💥 மகாராஷ்டிரா முதல்வர் பத்னாவிஸ், விவசாயத் தொழில், கிராமப்புற உருமாற்றத்திற்கான SMART முன்முயற்சியை தொடங்கியுள்ளார்.

💥 பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. மாநாடு போலந்தில் நடைபெற்றது.

💥 எலியட் கிபோகெஜ் மற்றும் காத்ரின் இபார்குன் ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களாக IAAF ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து . 
அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

No comments:

Post a Comment