Pages

Friday, December 7, 2018

முதலாவது மத நல்லிணக்க ஆய்வு நிறுவனம்...! ||| ###TNPSC தேர்வு, 2018 ##Current affairs - முக்கிய நடப்பு நிகழ்வுகள்


முதலாவது மத நல்லிணக்க ஆய்வு நிறுவனம்...!
###TNPSC தேர்வு, 2018
##Current affairs -
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🌻 கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

🌻 புது தில்லியில் யுசைளநறய 2.0 என்பதின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் அலைபேசி செயலி தொடங்கப்பட்டது.

🌻 பஞ்சாபின் அமிர்தசரஸில் முதலாவது மத நல்லிணக்க ஆய்வு நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

🌻 இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2018 ஆம் ஆண்டின் சிறப்புப் படைப் பயிற்சியான 'வஜ்ரா பிரகார்" என்று பெயரிடப்பட்ட பயிற்சியானது, இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப் படைப் பிரிவு தளத்தில் நடைபெற்றது.

🌻 பிஜியில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான, பிஜி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் பிரதமராக உள்ள ஃபிராங்க் பைனிமாராமா இரண்டாவது முறையாக, பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


🌻 லடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள, நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH- INDIA தொலை நோக்கியானது, முதன்முறையாக தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்து இருக்கின்றது.

🌻 இந்தியாவின் முதலாவது திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகமான ஸ்ரீவிஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இப்பல்கலைக் கழகமானது ஹரியானாவின் பால்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🌻 இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முதலீட்டை அதிகரித்தல், வர்த்தகங்களை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக, இந்தியா - ஜப்பான் வர்த்தக குழுவின் 2 நாள் அளவிலான முதல் 'கொன்னிச்சி வா புனே திருவிழா" மகாராஷ்டிராவின் புனேவில் நடத்தப்பட்டது.

🌻 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. 

🌻 உலகளாவிய இணையதள அமைப்பான என்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் UASG (Universal Acceptance Steering Group) என்ற அமைப்பானது ராஜஸ்தானின் iiமுதல்வர் வசுந்ரா ராஜே-வுக்கு 'உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர்" என்ற விருதை வழங்கியுள்ளது.



No comments:

Post a Comment